தமிழ்நாடு

எதிர்காலம் குறித்த அச்சம்: சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வாட்டும் மன அழுத்தம்

எதிர்காலம் குறித்த அச்சம்: சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வாட்டும் மன அழுத்தம்

jagadeesh

இப்படி ஒரு சூழலை உலகமே எதிர்பார்த்திருக்காதுதான். அண்மைய காலங்களில் எதிர்நோக்காத கொரோனா பெருந்தொற்று பேரிடர், மனரீதியிலான பாதிப்புகளையும் உண்டாக்குவதாக கூறுகிறார்கள் மனநல மருத்துவர்கள். உதாரணமாக கோவையில் மனநல ஆலோசனை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வேலைக்கு போகும் குடும்பத்தலைவர், இளைஞர்கள், இளம்பெண்கள், பள்ளிக்குப்போகும் மாணவ, மாணவியர், தினசரி வேலை செய்யும் தொழிலாளர்கள், குடும்பத்தலைவிகள் என அனைத்து தரப்பின் இயல்பு வாழ்க்கையையும் புரட்டிப்போட்டுள்ள கொரோனா பொதுமுடக்கம், இதுவரை காணாத வகையில் தினசரி பொழுதுகளை மாற்றி அமைத்திருக்கிறது. இதனால், வழக்கத்துக்கு மாறாக மனநல ஆலோசனை மையங்களை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள மனநல மருத்துவர்கள். பள்ளிக்குழந்தைகள் தொடங்கி, இளைஞர்கள் வரை பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

தூக்கமின்மை , தனிமை , இனம்புரியாத கோபம் , ஒத்துழையாமை என பல்வேறு மனஉளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு ஆளாகும் சிறார்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் , இவர்களின் முதல் மருத்துவர்களே பெற்றோர்கள்தான் என்றும் தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.

மனித குலத்திற்கு பெரும் சவாலான காலமாகவே இந்த கொரோனா பெருந்தொற்று அமைந்திருக்கும் நிலையில், அன்பும், தன்னம்பிக்கையும், நேர்மறை எண்ணங்களும் இந்த பேரிடரை வெல்ல உதவும் என்று நம்பிக்கையளிக்கிறார்கள் மருத்துவர்கள்.