விஷ சாராய விவகாரம் முகநூல்
தமிழ்நாடு

விஷ சாராய விவகாரம்| மறுக்கப்பட்ட நிதி! தோண்டி எடுக்கப்படும் பட்டியலில் வராத ஒருவரின் உடல்?

விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் பட்டியலில் வராத இருவரில் ஒருவரின் உடலை தோண்டியெடுத்து உடற்கூராய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

PT WEB

கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி கிராமத்தில் சாராயம் அருந்தி முதலில் உயிரிழந்த இளையராஜா மற்றும் ஜெயமுருகன் ஆகியோர், விஷ சாராயம்தான் அருந்தினர் என்ற தகவல் கிடைப்பதற்கு முன்பே இளையராஜா உடல் தகனம் செய்யப்பட்டது, ஜெயமுருகன் உடல் புதைக்கப்பட்டது.

இதனால் கள்ளச்சாரயம் அருந்தி உயிரிழந்தவர்கள் பட்டியலில் இவர்கள் பெயர்கள் வரவில்லை. அரசின் நிவாரண உதவி கிடைக்காமல் நிற்கதியாக நிற்கும் குடும்பம் பற்றி புதியதலைமுறை செய்தி வெளியிட்ட நிலையில், ஜெயமுருகனின் உடலை தோண்டியெடுத்து அதே இடத்தில் உடற்கூராய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.