பாஜக - பாமக கூட்டணி PT WEB
தமிழ்நாடு

பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக தொகுதிகளின் பட்டியல் வெளியானது! முழுவிபரம்

பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியல் வெளியானது.

விமல் ராஜ்

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் அதிமுக மற்றும் பாமக உடனான பேசுச்சுவார்தை இறுதி செய்யப்படாமல் தொடர்ந்து இழுபறியில் நீடித்து வந்தது.

இந்தநிலையில், திடீரென திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்டக் குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவதாக முடிவெடுக்கப்பட்டது.

நேற்று முன் தினம், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக – பாமக இடையிலான கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், எந்தெந்த தொகுதிகள் என அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

தொகுதிகளின் பட்டியல்

இந்தநிலையில் தற்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள,பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1.காஞ்சிபுரம்,

2.அரக்கோணம்,

3.தருமபுரி,

4.ஆரணி,

5.விழுப்புரம்,

6.கள்ளக்குறிச்சி,

7.சேலம்,

8.திண்டுக்கல்,

9.மயிலாடுதுறை,

10.கடலூர், ஆகிய 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.