தமிழ்நாடு

நேற்றே வாங்கி குவித்த மதுக்குடிப்போர்: தமிழகத்தில் நேற்று மது விற்பனை எவ்வளவு தெரியுமா?

நேற்றே வாங்கி குவித்த மதுக்குடிப்போர்: தமிழகத்தில் நேற்று மது விற்பனை எவ்வளவு தெரியுமா?

webteam

தமிழகத்தில் நேற்று மட்டும் 188 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையிலும் கூட தளர்வுகளின் அடிப்படையில் தமிழக அரசு மதுபானக் கடைகளைத் திறந்தது. இதனையடுத்து பல இடங்களில் மதுக்குடிப்போர் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக் கவசத்தை அணியாமலும் மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.


இந்நிலையில் இன்று தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் நேற்று மதுபானக் கடைகளில் மது குடிப்போர் கூட்டம் அலை மோதியது. அந்த வகையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 188 கோடியே 86 லட்சம் ரூபாய்க்கு மதுமானம் விற்பனை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 44 கோடியே 85 லட்சத்துக்கும், திருச்சி மாவட்டத்தில் 42 கோடியே 72 லட்சத்துக்கும், சேலம் மாவட்டத்தில் 40 கோடியே 70 லட்சத்துக்கும், சென்னையில் 21 மோடியே 69 லட்சத்துக்கும், கோவையில் 38 கோடியே 90 லட்சத்துக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த வார சனிக்கிழமை மட்டும்  177 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வார சனிக்கிழமை 188 கோடியே 86 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.