விக்கிரவாண்டியில் இரு மடங்காக அதிகரித்த மது விற்பனை புதிய தலைமுறை
தமிழ்நாடு

நெருங்கும் இடைத்தேர்தல்.... விக்கிரவாண்டியில் இரு மடங்காக அதிகரித்த மது விற்பனை!

PT WEB

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த இரண்டு வாரங்களாக அத்தொகுதியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்து இருக்கும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மது விற்பனை சூடு பிடித்து உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் 20 டாஸ்மாக் கடைகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 35 டாஸ்மாக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன.

சராசரியாக நாள் ஒன்றுக்கு தலா இரண்டு லட்ச ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஒரு நாளைக்கு தலா 4 லட்ச ரூபாய் வரைக்கும் மது விற்பனை நடைபெற்று வருவதாக டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.

டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்படுவதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். சாதாரண நாட்களில் அனைத்து வகை மதுபானங்களும் கிடைக்கும் நிலையில், தற்பொழுது குறிப்பிட்ட வகை மட்டுமே கிடைப்பதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

டாஸ்மாக் விற்பனை தொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் நாம் கேட்ட பொழுது, “எப்பொழுதும் போல வழக்கமான ஊழியர்கள்தான் பணிகள் இருக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மொத்தமாக கடைகளுக்கும் மதுபானங்கள் கொண்டு செல்லப்படுன்றன” என்றனர்.

மது

இடைத்தேர்தலுக்காக விக்கிரவாண்டிதொகுதியில் அரசியல் களம் மற்றும் பரபரப்பாக இல்லாமல், டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை செய்யக்கூடிய மதுபானங்களின் எண்ணிக்கையும் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய 35க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் வருமானம் அதிகரித்து இருக்கிறது.