தமிழ்நாடு

ராமராஜ்யங்கள் ராஜ்பவனுக்குள்ளேயே இருக்கட்டும்: மதுரை எம்பி. சு.வெங்கடேசன்

ராமராஜ்யங்கள் ராஜ்பவனுக்குள்ளேயே இருக்கட்டும்: மதுரை எம்பி. சு.வெங்கடேசன்

kaleelrahman

'ராமராஜ்யங்கள் ராஜ்பவனுக்குள்ளேயே இருக்கட்டும்' என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் பதிவை கடுமையாக விமர்சித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்தே சில சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், சென்னையில் உள்ள ஸ்ரீ ராம் சமாஜத்தில் நேற்று நடைபெற்ற ராம நவமி விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்று விழாவை துவங்கி வைத்து பேசுகையில்... இன்றைய மிக முக்கிய காலத்தில் நம்நாடு அனைவரின் வளர்ச்சியையும் உள்ளடக்கி ராமராஜ்யத்தை நோக்கி முன்னேறி வருவதாக தெரிவித்ததாக ஆளுநரின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

ஆளுநரின் பதிவை இணைத்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், உங்கள் ராமராஜ்யங்கள் ராஜ் பவனுக்குள்ளேயே இருக்கட்டும். அவை எப்போதும் ராஜ் பவனுக்கானவை மட்டுமே. இந்தியர்களுக்கானது அரசியல் சாசனமே, அந்தக் கனவே ஆளுநருக்கு தேவை என கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.