தமிழ்நாடு

உயிர் வலிக்கிறது; வைரமுத்து வேதனை.!

உயிர் வலிக்கிறது; வைரமுத்து வேதனை.!

webteam

தேனி மாவட்டம் போடி அருகே மலை ஏறும் பயிற்சிக்காக சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கிக்கொண்டது தமிழகம் முழுக்க வேதனையும் அதிர்ச்சியும் உண்டாக்கி உள்ளது. மலை ஏற சென்ற 36 பேரில் 9 உயிர் இழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

இந்தச் சம்பவம் பற்றி கேள்விபட்டதில் இருந்தே  பலரும் தங்கள் வேதனையை வெளிபடுத்தி வரும் நிலையில், வைரமுத்துயும் இது பற்றி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘உயிர் வலிக்கிறது’ என்கிற தலைப்பில் பதிவிட்டு இருக்கிறார்.

அதில் "உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது. காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள் மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன். 

“சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ; தீயே உனக்கொருநாள் தீமூட்டிப் பாரோமோ” என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன்வாங்கிக் கலங்குகிறேன்.  இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனிதப் பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்திலிருந்து பாடம் படிப்போம்; புதிய இழப்புகள் நேராமல் காப்போம் என தன்னுடைய வேதனையை வெளிபடுத்தி உள்ளார்.