சென்னையில் சாலை விபத்துகளை குறைக்க அறிமுகப்படுத்தப்பட்ட எல்இடி விளக்கு வேகத்தடைகள் ஒரு மாதத்திற்குள்ளாகவே செயலிழக்கத் தொடங்கிவிட்டன.
சென்னையில் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக எல்இடி விளக்கு வேகத்தடைகளை காவல்துறை பயன்படுத்தியது.சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் காந்தி சிலை சிக்னல், காமராஜர் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை ஆகிய இடங்களில் ஒரு மாதத்திற்கு முன்பு சோதனை அடிப்படையில் எல்இடி விளக்கு வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.
சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளுடன் கூடிய இந்த விளக்கு வேகத்தடைகள், போக்குவரத்து சிக்னலோடு இணைந்து ஒளிரும் வகையில் பொருத்தப்பட்டன. இந்தத் திட்டம் சென்னையின் முக்கிய இடங்களில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் எனவும் காவல்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் எல்இடி விளக்கு வேகத்தடைகள் அமைக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள்ளாகவே, அவை செயலிழக்கத் தொடங்கிவிட்டன.