தமிழ்நாடு

சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது: இது தொடர்ந்தால் ஆட்சி அகற்றப்படும் - கே.பி.ராமலிங்கம்

சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது: இது தொடர்ந்தால் ஆட்சி அகற்றப்படும் - கே.பி.ராமலிங்கம்

webteam

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது இதேநிலை தொடர்ந்தால் மிக விரைவில் ஆட்சி அகற்றப்பட வாய்ப்புள்ளது. என பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்

பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசும்போது... தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. தினந்தோறும் வழிப்பறி, பாலியல் வன்கொடுமை முயற்சி இரவு முழுவதும் போதை பொருள் விற்பனை நடைபெறுகிறது. இதேநிலை தொடர்ந்தால் மிக விரைவில் ஆட்சி அகற்றப்பட வாய்ப்புள்ளது.

போதை பொருள் விற்பனையை திமுக நிர்வாகிகளே செய்வதால் காவல்துறையால் தடுக்க முடியவில்லை காவல் துறையினர் பாஜக-வினர் என்ன செய்கின்றனர். கூட்டம் போட்டால் என்ன பேசுகின்றனர். என்பதை நோட்டமிடும் வேலையைதான் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் 95 சதவீதம் இந்து மக்கள் உள்ளனர். இவர்களை அவமானப்படுத்தும் வகையில் இந்துக்கள் வேசி மகன் என திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா கூறியது ஒழுக்கமில்லாதவர் தரங்கெட்டவரின் பேச்சு. இதற்கு முதல்வர் உடந்தை. அந்த தைரியம்தான் ஆ.ராசா விற்கு. இதற்கு பாஜகவினர் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.