குலசேகரப்பட்டினத்தின் 2,376 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான திட்டம் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதன்மை விஞ்ஞானி த.வி வெங்கடேஷ்வரன் நம்மிடையே பேசினார்.
அவர் பேசுகையில், "ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பூமியின் துருவப்பாதையில் சுற்றுவதைப்போல் ராக்கெட் அனுப்பவேண்டுமென்றால், தென்கிழக்கு திசையில் ராக்கெட் அனுப்பி, பிறகு அந்த ராக்கெட்டை தெற்கு திசைக்கு திருப்பி மாற்றுவார்கள்.
இதற்கு டாக்லெக் மேன்யூவர் என்று பெயர். இதனால் எரிபொருளானது அதிகமாக விரையமாகிறது. ஆனால் குலசேகரப்பட்டிணத்திலிருந்து ஏவுகனையை நேராகவே விண்ணில் செலுத்தலாம். இதனால் உந்து சக்தியும் அதிகமாகும்“ என்கிறார்.