தமிழ்நாடு

சாகித்ய அகாடமி விருதை ஏற்க இன்குலாப் குடும்பம் மறுப்பு

webteam

கவிஞர் இன்குலாப் இறந்து ஒரு வருடத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ள சாகித்ய அகாடமி விருதை அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்துள்ளனர்.

2017ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு இன்குலாப் எழுதிய காந்தள் நாட்கள் எனும் கவிதை தொகுப்பு தேர்வாகியுள்ளது. இந்நிலையில் இந்த விருதை ஏற்க அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். அ‌ரசு முகம் மாறலாம், ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என இன்குலாப்பின் மகன் சாகித்ய அகாடமி விருதை ஏற்க மறுத்துள்ளார்.

பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இன்குலாப், 2008ஆம் ஆண்டு தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதை, 2009ல் இலங்கை இனப்படுகொலைக்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை எனக்கூறி திரும்ப கொடுத்தவர். விருதை ஏற்றுக்கொள்வது தம் தந்தை வாழ்ந்த வாழக்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பது என அவரது மகன் கூறியுள்ளார்.