தமிழ்நாடு

வனவிலங்குகள் செல்லும்  பகுதிகளில் உள்ள நிலஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: அமைச்சர் பிடிஆர்

வனவிலங்குகள் செல்லும்  பகுதிகளில் உள்ள நிலஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: அமைச்சர் பிடிஆர்

Veeramani

வனவிலங்கு பகுதிகளில் உள்ள நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்

வனவிலங்குகளால்  பயிர் சேதம் அடைகிறது. மனித உயிர்களுக்கு பாதுகாப்பும் இல்லை. பயிர்களை பாதுகாக்க வேளாண் பட்ஜெட்டிலில் திட்டம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப் பட்டது” என சட்டப்பேரவையில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், “பயிர்களை பாதுகாப்பதில் வன விலங்குகளான யானைகள், எருமைகளால் பிரச்சினைகள் இருக்கிறது. நிச்சயமாக அதற்கான திட்டத்தை அரசு  வகுக்கும்என தெரிவித்தார்

இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “வனவிலங்குகளால் பயிர்கள் சேதம் அடைவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகள் வசிக்கும் பகுதியில்  நில ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். அந்த நில ஆக்கிரமிப்புகளை அகற்றி வனவிலங்குகள் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதன் மூலம் பயிர்களை பாதுகாக்க முடியும்” எனத் தெரிவித்தார்