குலசை திருவிழா புதிய தலைமுறை
தமிழ்நாடு

குலசேகரப்பட்டினம் | முத்தாரம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது ‘தசரா’ திருவிழா!

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் 12ஆம் தேதி குலசை கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெறும்.

PT WEB

உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசராத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் 12ஆம் தேதி குலசை கடற்கரையில் லட்சக்கணக்கான
பக்தர்கள் முன்னிலையில் நடைபெறும். இந்த திருவிழாவுக்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் காப்பு கட்டி, மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். காளி அம்மன், விநாயகர், முருகன் என கடவுள்களின் வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள்.