தமிழ்நாடு

அணுக்கழிவு மையத்தால் பாதிப்பில்லை - அமைச்சர் கருப்பணன்

அணுக்கழிவு மையத்தால் பாதிப்பில்லை - அமைச்சர் கருப்பணன்

webteam

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதால் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அமைச்சர் அமைச்சர் கருப்பணன்தெரிவித்துள்ளார். 

கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகத்தின் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் நெல்லை பகுதியின் சுற்றுவட்டார மக்களும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். அணுக்கழிவு மையம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என இயற்கை ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய தலைமுறைக்கு பிரத்யேக‌ பேட்டியளித்த தமிழக சுற்று‌ச்சூழல் துறை அமைச்சர் கே.சி.அமைச்சர் கருப்பணன், “ஆய்வுகள் மே‌ற்கொண்டு பாதிப்பு இல்லாத வகையில் அணுக்கழிவு மையம் அமைக்கப்படும். ஏற்கனவே செயல்பட்டு வரும் கூடங்குளம் அணு உலையால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அதே போல் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அணுக்கழிவு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அணுக்கழிவு மையத்தால் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என்று தெரிவித்தார்.