தமிழ்நாடு

ரஷ்யா - உக்ரைன் போர்: தாமதமாகும் கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள்?

ரஷ்யா - உக்ரைன் போர்: தாமதமாகும் கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள்?

Sinekadhara

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு பல நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், அது கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3,4,5,6ஆவது அலகுகள் பணியை தாமதப்படுத்தும் எனத் தெரிகிறது.

கூடங்குளத்தில் முதல் இரண்டு அலகுகளில் மின்உற்பத்தி நடைபெறும் நிலையில், 3 மற்றும் 4ஆம் அலகுகளை 2023க்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு 5 மற்றும் 6ஆம் அலகுகளை 2024ல் செயல்படுத்த திட்டம் உள்ளது. 3 மற்றும் 4ஆம் அலகுகளில் மின்உற்பத்தி தொடங்கினால், தமிழகத்திற்கு 1000 மெகாவாட்டுக்கு குறைவான மின்சாரமே கிடைக்கும் நிலை உள்ளது. எனினும், அதிகரிக்கும் மின்சார தேவையில் ஓரளவு சமாளிக்க இது உதவும் என்ற நிலையில், உக்ரைன், ரஷ்யா இடையேயான போரால் இத்திட்டங்கள் காலதாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் கூடங்குளம் அணுமின் நிலைய அலகுகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் விதித்து வரும் பொருளாதாரத் தடையால் இந்த தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.