தமிழ்நாடு

தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி இரட்டை இலையில் போட்டி

தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி இரட்டை இலையில் போட்டி

webteam

அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக புதிய தமிழகம் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. புதிய தமிழகம் கட்சி தென்காசி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் தென்காசி மக்களவைத் தொகுதியில் தனிச்சின்னத்திற்கு பதிலாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது. மேலும் கிருஷ்ணசாமி தென்காசியில் போட்டியிட இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மக்களவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தங்கள் சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனத் அதிமுக தலைமை கேட்டுகொண்டதன் பேரில் கிருஷ்ணசாமி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.