எக்ரே pt
தமிழ்நாடு

ஊத்தங்கரை: 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவன்..தொண்டையில் சிக்கியதால் விபரீதம்..அகற்றிய மருத்துவர்!

PT WEB

ஊத்தங்கரை அருகே ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கி ஆபத்தில் இருந்த சிறுவனை காப்பாற்றிய ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சிவா-விஜயபிரியா தம்பதியரின் 10 வயது சிறுவன் வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த ₹5 ரூபாய் நாணயம் எதிர்பாராத விதமாக விழுங்கியுள்ளார். இதனைக் கண்ட அவரது உறவினர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவ அலுவலர் மதன்குமார், சதீஷ், செந்தில் உள்ளிட்ட மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது தொண்டை பகுதியில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருந்தது உறுதி செய்தனர். தொண்டை பகுதியில் சிக்கிக் கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்புறப்படுத்த முடிவெடுத்து, குறித்த நேரத்தில் சிறுவன் விழுங்கிய நாணயத்தை அப்புறப்படுத்தினார்.

சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மதன்குமார், காது மூக்கு தொண்டைமருத்துவர் செந்தில், மயக்கவியல் நிபுணர் மருத்துவர் சதீஷ்குமார் அவர்களுக்கு, சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் பொதுமக்கள் மருத்துவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளும் தெறிவித்து வருகின்றனர்கள்.