வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய கூலித்தொளி pt desk
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்த கூலித் தொழிலாளி - வியப்பில் கிராம மக்கள்

சூளகிரி அருகே தான் வளர்க்கும் நாய்க்கு தொழிலாளி ஒருவர் வளைகாப்பு நடத்திய நிகழ்வு கிராம மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கூறாக்களப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். விவசாயியான இவர், கூலித் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் செல்லப் பிள்ளையாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். தற்போது அந்த நாய் கர்ப்பம் அடைந்துள்ள நிலையில் நாய் மீது அதீத பற்று கொண்டுள்ள நாராயணன், தனது நாய்க்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்தார்.

நாய்க்கு வளைகாப்பு

இதையடுத்து வளைகாப்பு நடத்துவதாக பத்திரிக்கை அடித்து அதை, சொந்த பந்தம் மற்றும் நண்பர்களுக்கு வைத்து அனைவரையும் அழைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தனது நாயை மணப்பெண் போல அலங்கரித்து அதற்கு புடவை கட்டி ஒன்பது தட்டில் சீர்வரிசையோடு, நலங்கு வைத்து வளைகாப்பு நிகழ்ச்சியை விமர்சையாக நடத்தியுள்ளார்.

ஒரு கூலித் தொழிலாளி, தான் வளர்க்கும் நாய்க்கு வளைகாப்பு நடத்திய நிகழ்வு சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.