தமிழ்நாடு

கோவில்பட்டி: வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கிய காவல்துறை

கோவில்பட்டி: வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கிய காவல்துறை

kaleelrahman

கோவில்பட்டியில் காவல்துறை சார்பில் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதரம் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, காய்கனி, மளிகை பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காவல்துறை சார்பில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அரிசி, காய்கனி, மளிகை பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி டி.எஸ்.பி. கலைகதிரவன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், ஏழை, எளிய மக்கள் என 110 பேருக்கு அரிசி, காய்கனி, மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.