தமிழ்நாடு

கோவைச் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்: உடற்கூராய்வில் அதிர்ச்சி

கோவைச் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்: உடற்கூராய்வில் அதிர்ச்சி

webteam

கோவையில் கொடூரமாக கொல்லப்பட்ட 7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வு அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த சிறுமி வீட்டின் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில், சிறுமியின் உடற்கூராய்வு அறிக்கையும் வெளியாகியுள்ளது. அந்த சிறுமி ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சிறுமி சத்தம்போட்டுவிடக்கூடாது என்பதற்காக, அவரது வாயில் துணியை அடைத்து வைத்து கொடூரர்கள் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. 

அடித்துத் துன்புறுத்தி, கயிறு ஒன்றின் மூலம் கழுத்தை நெரித்தபோது, கழுத்தில் உள்ள நரம்பு துண்டாகி சிறுமியின் உயிர் பிரிந்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் தொடர்ச்சியாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டிருப்பதும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. 

இதனிடையே, குற்றவாளிகளை ‌பற்றிய விவரம் தெரிந்தவர்கள், தங்களிடம் தகவல் தெரிவிக்கும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அதற்காக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. துப்புக் கொடுப்பவர் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும், அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.