கோத்தகிரியில் உள்ள குருக்கத்தி கிராமத்துக்குள் புகுந்த கரடி தேயிலை தோட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள குருக்கத்தி ஊருக்குள் கரடி ஒன்று புகுந்துள்ளது. இந்தக் கரடி அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டப்பகுதிகளில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சடமைந்துள்ளனர். அத்துடன் கரடியை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் பொதுமக்களும், வனத்துறையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஊருக்குள் புகுந்த அந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்டி அடிப்பதற்காக முகாமிட்டுள்ள வனத்துறையினர், அதன் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இரண்டு கூண்டுகளை வைத்து கண்காணித்து வருகின்றனர். இதையடுத்து கரடி பிடிபடும் பட்சத்தில் அதனை பாதுகாப்பாக வனத்தில் விடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.