திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தீபத்திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதில் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திற்காக மலை மீது கொப்பரை கொண்டு செல்லப்பட்டது.
நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் தீபத் திருவிழா கடந்த நவம்பர் 17ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் உச்ச நிகழ்வாக, நாளை அதிகாலை 4 மணிக்கு திருக்கோவில் கருவறை முன்பு பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த திருவிழாவிற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆன்மீக பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. மகா தீபம் ஏற்றப்படும் , கொப்பரைக்குகோ பூஜையுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் 20க்கும் மேற்பட்டோர் மலை உச்சிக்கு மகாதீப கொப்பரையை தோளில் சுமந்து சென்றனர். ஐந்தேமுக்கால் அடி உயரமும் 300 கிலோ எடையும் கொண்ட மகாதீப கொப்பரை, பஞ்ச லோகத்தால் செய்யப்பட்டது.
மகாதீப கொப்பரையில் ஆன்மீக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 4,500 லிட்டர் நெய் மற்றும் 1.500 மீட்டர் காடா துணிகளைப் பயன்படுத்தி நாளை மாலை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த கொப்பரையை ஏராளமான பக்தர்கள் வணங்கிச் சென்றனர்.