PP shahjahan pt desk
தமிழ்நாடு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: “சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்” - அரசு வழக்கறிஞர்

கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து நவம்பர் 29ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

PT WEB

செய்தியாளர்: ஜான்சன்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதி அப்துல் காதர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் குடும்ப நல நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.

kodanadu estate

இதில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினார். இதே போல் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். மேலும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் சிபிசிஐடி போலீசார் நேரில் வருகை புரிந்தனர்.

குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இண்டர்போல் விசாரணை மற்றும் புலன் விசாரணை நடைபெற்று வருவது குறித்தும் நீதிபதியிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் விளக்கினர். இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.