தமிழ்நாடு

கொடநாடு கொலை வழக்கு 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

கொடநாடு கொலை வழக்கு 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

webteam

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் 300 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை கோத்தகிரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுள்ளது.

நீலகிரி மாவட்டம் உள்ளது கொடநாடு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா இங்குதான் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் இந்த பங்களாவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது. அப்போது காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய கனகராஜ், சயான், ஜெம்சீர்அலி, சந்தோஷ் சமி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், முதல் குற்றவாளியான கனகராஜ், சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், மற்ற 10 பேரும், கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சம்பந்தமாக, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை, கோத்தகிரி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், போலீஸார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 10 பேர் சம்பந்தப்பட்டு உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் 97 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.