Kodaikanal pt desk
தமிழ்நாடு

கொடைக்கானல்: தாமதமாக தொடங்கிய முன்பனிக் காலம் - மலைகளோடு கொஞ்சி விளையாடும் மேகக்கூட்டம்

தமிழகத்தில் ஒரு மாதம் தாமதமாக தொடங்கியுள்ள முன்பனிக்காலம்... மலைகளின் இளவரசியோடு கொஞ்சி விளையாடும் மேகக் கூட்டங்கள்...

webteam

தமிழகத்தில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, வழக்கத்திற்கு மாறாக, மார்கழி மாத இறுதி வரை, பொழிந்துள்ளது. மார்கழி மற்றும் தை மாதங்களை, முன்பனிக்காலம் என்றும், மாசி மற்றும் பங்குனி மாதங்களை, பின்பனிக்காலம் என்றும், சங்க நூல்களில் பனிக்காலத்திற்கு வரையறை வகுக்கப்பட்டுள்ளது.

kodaikanal

இந்நிலையில் இந்த ஆண்டு, மார்கழி மாதம் முழுவதும், வடகிழக்கு பருவமழையின தாக்கம், தமிழகத்தில் நீடித்த நிலையில், தை மாதம் நெருங்கும் நேரத்தில் முன்பனிக்காலம் துவங்கியுள்ளது. முன்பனிக்கால மேகக்கூட்டங்கள், மலைகளின் இளவரசியோடு, கொஞ்சி விளையாடும் காட்சிகளை, கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு பகுதியில், காணமுடிகிறது. அழகு கொஞ்சும் இக்காட்சிகளை, கொடைக்கானல் வந்திருக்கும் பயணிகள், வியப்புடன் கண்டு ரசிப்பதோடு முன்பனிக் காலத்தின், குளிரை அனுபவித்து வருகின்றனர்.

முன்பனிக்காலம் தாமதமானாலும், தை மாத துவக்க நாட்களில், கொடைக்கானல் மலைப் பகுதிகளில், கடும் உறைபனி நிலவும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பொங்கல் தொடர் விடுமுறையை, கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளை, பனிக்காலத்தின் அதிசயங்கள் நிறைந்த ஆச்சர்யங்களை வழங்க, மலைகளில் இளவரசி காத்திருக்கிறாள்.