PP shahjahan pt desk
தமிழ்நாடு

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை - அரசு தரப்பு வழக்கறிஞர் சொல்வதென்ன?

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலீசார் சார்பில் 140 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார்.

webteam

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலீசார் சார்பில் 140 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், கணினி பொறியாளர் தினேஷ் வழக்கு மற்றும் கார் ஓட்டுநர் கனகராஜ் வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளும் கூடுதலாக விசாரிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார்.

kodanadu estate

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் சயான், வாளையார் மனோஜ், ஜம்ஷிர் அலி, ஜித்தின் ஜாய் ஆகிய நான்கு பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அதேபோல் அரசு தரப்பு வழக்கறிஞர்களான ஷாஜகான் கனகராஜ் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்களான விஜயன், முனிரத்தினம் ஆகியோரும் ஆஜராகினர். இவ்வழக்கினை தற்போது விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீஸ் விசாரணை அதிகாரியான முருகவேல் தலைமையில் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

accused

வழக்கில் தொலைத் தொடர்பு மின்னணு சாதனங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் பல்வேறு சாட்சிகள் இடையே சிபிசிஐடி போலீசார் சார்பில் விசாரணை நடத்த அரசு தரப்பு சார்பில் கால அகவாசம் கேட்கப்பட்டதால், வழக்கை விசாரணை செய்த நீதிபதி எதிர்வரும் ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்துவைத்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் ,பெறப்பட்ட செல்போன் உரையாடல்கள் நீதிமன்ற உத்தரவின்படி அகமதாபாத் பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டு,. இதையடுத்து நடைபெற்று வரும் விசாரணையை நீதிபதி கேட்டறிந்தார்.

accused

இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் சார்பில் இதுவரை 140 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்குடன் தற்கொலை செய்து கொண்ட எஸ்டேட் கணினி பொறியாளர் தினேஷ் வழக்கு மற்றும் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த வழக்கு ஆகிய இரண்டு வழக்கும் கூடுதலாக விசாரிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார்.