தமிழ்நாடு

புழல் சிறையில் புழங்கும் கத்திகள்! திடுக்கிடும் உண்மை..

புழல் சிறையில் புழங்கும் கத்திகள்! திடுக்கிடும் உண்மை..

webteam

புழல் சிறையில் காவலர்கள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கத்திகள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையை அடுத்த புழல் சிறையில் உள்ள கைதிகளில் சிலர் சக கைதிகளுக்கு செல்போன்களை வாடகைக்கு விட்டு பணம் பெறுவதாக புகார் எழுந்தது. அதுமட்டுமின்றி சிறைக்குள்ளே சில கட்டுப் பஞ்சாயத்துகள் நடத்தப்படுவதாகவும், கைகதிகளில் சில ரவுடிகள் புதிதாக சிறைக்கு வரும் கைதிகளை வேலை வாங்குவதாகவும் கூறப்பட்டது. அவ்வாறு வேலை செய்ய மறுக்கும் கைதிகளை, அந்த ரவுடிக் கைதிகள் கத்தியை காட்டி மிரட்டுவதாகவும் சிறைத்துக்கு புகார்கள் வந்துள்ளது. 

இதையடுத்து சிறைத்துறை டிஐஜி முருகேசன் தலைமையில் 60 காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணி முதல் 9 மணி வரை நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், தண்டனை கைதிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து 2 கத்திகள், ஒரு செல்போன் மற்றும் சிம்கார்டு, சார்ஜர், 500 ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.