தமிழ்நாடு

'நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை கிடப்பில் போடுவதா?' - ஆளுநருக்கு கி.வீரமணி கண்டனம்

'நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை கிடப்பில் போடுவதா?' - ஆளுநருக்கு கி.வீரமணி கண்டனம்

கலிலுல்லா

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட்டுக்கு எதிரான சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பாமலும், திருத்தம் கூறாமலும், பதில் அளிக்காமலும் இருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 89ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் பல்வேறு புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சுப வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டனர்.

அப்போது பேசிய கி.வீரமணி, ''சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட்டுக்கு எதிரான சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பாமலும், திருத்தம் கூறாமலும், பதில் அளிக்காமலும் இருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது'' என்று ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.