தமிழ்நாடு

1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 1லட்சம் லஞ்சம்: பள்ளி முதல்வர் கைது

1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 1லட்சம் லஞ்சம்: பள்ளி முதல்வர் கைது

webteam

சென்னை அசோக் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்றா‌ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தின் கீழ், தலித் பெற்றோர் தனது மகனை ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்காக அசோக் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விண்ணப்பித்திருக்கின்றனர். இதுதொடர்பாக, பள்ளி முதல்வர் ஆனந்தனைச் சந்தித்தபோது, மாணவர் சேர்க்கைக்கு அவர் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்‌டதாகத் தெரிகிறது. இதுகுறித்து சிபிஐயிடம் மாணவரின் பெற்றோர் புகார் அளித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, பள்ளி முதல்வர் ஆனந்தன் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெறும்போது, அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள், அவரை கையும் களவுமாகக் கைது செய்தனர். பின்னர் அவரை சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆனந்தனை இன்று சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.