தமிழ்நாடு

கீழடி: 8ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என எதிர்பார்ப்பு

கீழடி: 8ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என எதிர்பார்ப்பு

Sinekadhara

கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள தொன்மையான பொருட்களை வரைபடம் மற்றும் புகைப்படம் மூலம் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதுமக்கள் தாழி, பானை ஓடுகள், தங்க அணிகலன் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. மேலும் உறை கிணறுகள், போர் வாள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்த தொன்மையான பொருட்களின் அளவு, வடிவம், காலம், குறிப்புகள் அடங்கிய வரைபடம் தயாரிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. 8ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.