தமிழ்நாடு

கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

kaleelrahman

கீழடியில் நடைபெற்று வரும் 8ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டரியப்பட்டுள்ளன.

மதுரை அருகே உள்ள கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. முதல் 5 கட்ட அகழாய்வு கீழடியில் மட்டும் நடைபெற்று வந்த நிலையில், தொன்மையான மனிதர்களின் இன மரபியல், வாழ்வியல் முறையை அறியும் வகையில் 6ஆம் கட்ட அகழாய்வு, கீழடியில் மட்டுமல்லாது அதனi சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொந்தகையில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வரும் நிலையில், இதுவரை இரு குழிகளில் 30 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு நடந்த இரண்டு கட்ட அகழாய்வை விட தற்போது நடந்து வரும் அகழாய்வில் அதிகமாக முதுமக்கள் தாழிகள் தொடர்ந்து கிடைத்து வருவது தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது