கீழடியில் அகழாய்வுப் பணிகளை தொடரவும், அருங்காட்சியகம் அமைக்கவும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என மத்திய சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் மீனாட்சியம்மன் கோயிலின் பாதுகாப்பு மற்றும் பிற வசதிகளை மேம்படுத்துவது, பழமையை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மகேஷ் சர்மா உறுதியளித்தார்.
கீழடி அகழாய்வு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், அங்கு அகழாய்வு நடத்தவும், அருங்காட்சியகம் அமைக்கவும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அதற்கான முழு ஒத்துழைப்பும் மாநில அரசுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார். கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்து பிரச்னையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.