தமிழ்நாடு

கீழடியில் முழு மண் பானை மூடியுடன் கண்டெடுப்பு: ஆய்வாளர்கள் ஆச்சர்யம்

கீழடியில் முழு மண் பானை மூடியுடன் கண்டெடுப்பு: ஆய்வாளர்கள் ஆச்சர்யம்

kaleelrahman

கீழடியில் 7ம் கட்ட அகழாய்வில் மூடியுடன் கூடிய பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது ஆய்வாளர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த பிப்ரவரி 13 முதல் தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. இயக்குனர் சிவானந்தம், இணை இயக்குனர் பாஸ்கரன் தலைமையில் நடந்து வரும் இப்பணியில் இதுவரை, கீழடியில் ஐந்து குழிகள் தோண்டப்பட்டதில் இருவண்ண பானைகள், பானை ஓடுகள், பகடை, கல்உழவு கருவி உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து தற்போது 3வதாக தோண்டப்பட்ட குழியில் ஒன்றரை அடி உயரம் கொண்ட மண்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது., மூடியுடன் கூடிய இந்த பானை முழுமையாக உள்ளது. இதுவரை கிடைத்த பானைகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் தற்போது முழுவதும் மூடப்பட்ட நிலையில் இந்த பானை கிடைத்துள்ளது. பானையின் உள்ளே பொருட்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

பானையை உட்புறம் இறுக்கமாக மூடிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உள்ளே பொருட்கள் எதுவும் இருக்கும் பட்சத்தில் 2600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுவரை கண்டெடுக்கப்பட்ட பானைகள் அனைத்தம் சேதமடைந்த நிலையில் தற்போது கிடைத்த பானை முழுமையாக உள்ளதால் ஆய்வாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.