தமிழ்நாடு

மகாத்மா கால் பதித்த காட்டாங்குளத்தூர் ரயில் நிலையம்

மகாத்மா கால் பதித்த காட்டாங்குளத்தூர் ரயில் நிலையம்

webteam

நாடு 71-வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூரை சேர்ந்த மக்கள், தங்களின் நீண்ட கால கோரிக்கை ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தேச தந்தை மகாத்மா காந்தி கால்பதித்த வரலாற்றை தாங்கி நிற்கிறது காட்டாங்குளத்தூர் ரயில் நிலையம். கடந்த 19‌46 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி, மகாத்மா காந்தி ‌சென்னையில் இருந்து மதுரைக்கு சென்றார். அப்போது அவர் சென்ற ரயில் அதிகாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது மகாத்மா காந்தியடிகள் ரயில் நிலையத்தில் இறங்கி அதிகாலை பிராத்தனை மேற்கொண்டு ஒருமணி நேரம் இந்த ரயில் நிலையத்தில் உலாவி இருக்கிறார்.

காந்தி வந்து சென்றதன் நினைவாக காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்தில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கின்றனர். காந்தியின் வருகையை உறுதிப்படுத்தி மாவட்ட நிர்வாகமும் உறுதி கடிதம் அளித்துள்ளது. எனினும் ரயில்வே நிர்வாகம் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என வருத்தப்படும் மக்கள் விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்க ‌வேண்டும் என கோருகின்றனர்.