தமிழ்நாடு

ஆடிமாதம் முதல் ஞாயிறு: காசிமேட்டில் மீன் விற்பனை ஜோர்!- வஞ்சிரம் எவ்வளவு?

ஆடிமாதம் முதல் ஞாயிறு: காசிமேட்டில் மீன் விற்பனை ஜோர்!- வஞ்சிரம் எவ்வளவு?

jagadeesh

சென்னை காசிமேட்டில் ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்க ஏராளமானோர் கூடியதால் களை கட்டியுள்ளது.

சென்னை காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் மீன்களை வாங்குவதற்கு கூடுவது வழக்கம்.ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் பிறந்துள்ளதாலும், மீன் விற்பனை கூடத்தில் ஏராளமான அசைவ பிரியர்கள் மீன்களை வாங்குவதற்காக கூடியுள்ளனர்.மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் என ஒருபுறம் கூட்டம் இருக்கும் நிலையில், அசைவ பிரியர்கள் ஏராளமானோர் மீன் வாங்க காசிமேட்டில் கூடியுள்ளதால், காசிமேடு மீன்பிடி துறைமுகம் களைக்கட்டியுள்ளது.

விலைப்பட்டியல்

வஞ்சிரம் கிலோ 1200
கொடுவா கிலோ 800
பர்லா கிலோ 350
பாறை கிலோ 250
சங்கரா 400 முதல்
கடம்மா கிலோ 400
நெத்திலி கிலோ 300

இறால், நண்டு போன்றவை 350 முதல் 600 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.