தமிழ்நாடு

8 நாள்களில் காஷ்மீர் முதல் குமரி வரை சைக்கிளில் பயணித்து சாதித்த இளைஞர்!

8 நாள்களில் காஷ்மீர் முதல் குமரி வரை சைக்கிளில் பயணித்து சாதித்த இளைஞர்!

webteam

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான 3,700 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் 8 நாள்கள் 1 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்திருக்கிறார், ஆடில் டெலி என்னும் 24 வயது இளைஞர்.

காஷ்மீரின் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆடில் டெலி. 24 வயதான இவர் சைக்கிள் மூலம் நீண்ட தூர பயணங்களை செய்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான சுமார் 3,700 கிலோமீட்டர் தூரத்தை சாலை மார்க்கமாக சைக்கிளில் கடந்து சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த 22-ம் தேதி காலை 7.30 மணிக்கு ஸ்ரீநகரில் இருந்து தனது உலக சாதனை பயணத்தை சைக்கிளில் துவங்கினார்.

அங்கிருந்து பஞ்சாப், டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடக, தமிழ்நாடு என 10 மாநிலங்களை 8 நாள்கள் 1 மணி நேரம் 37 நிமிடத்தில் கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஏற்கெனவே இது போன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான 3700 கி.மி பயணத்தை 8 நாட்கள் 7 மணி நேரத்தில் கடந்து ராணுவ வீரர் ஒருவர் சாதனை படைத்து இருந்த நிலையில், தற்போது அந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில் ஆடில் டெலி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

கன்னியாகுமரிக்கு வந்தடைந்த அவருக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் பாராட்டுகள் தெரிவித்தனர். மேலும், இந்த சாதனை படைத்த அவருக்கு சற்று உடல்நிலை குறைபாடு ஏற்பட்டது. இதனால், நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள உகாசேவா மருத்துவமனையில் அனுமதியான அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

- நௌபல் அகமத்