தமிழ்நாடு

போலீஸ் காவலை எதிர்த்து கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் தரப்பு மனு

போலீஸ் காவலை எதிர்த்து கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் தரப்பு மனு

webteam

போலீஸ் காவலில் எடுக்கவுள்ளதை எதிர்த்து கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த சுரேந்தர் மற்றும் செந்தில்வாசனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனு மீதான விசாரணை இன்று வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாளை விசாரணை நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விசாரணை காணோளி காட்சி மூலம் நடைபெற உள்ளது. கைதானவர்களையும் சிறையில் இருந்தே வீடியோ மூலம் ஆஜர்படுத்த உள்ளனர். சுரேந்திரன் சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும், செந்தில்வாசன் செங்கல்பட்டு கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சுரேந்திரன் தரப்பில் போலீஸ் காவலில் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கந்த சஷ்டி கவசத்திற்கு எதிராக அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.