கறுப்பர் கூட்டம் நாத்திகன் என்கிற சுரேந்திரன் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு செந்தில் பாஸ்கர், சுரேந்திரன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சுரேந்திரன் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “அரசியல் ஆதாயத்திற்காகவும், மலிவான விளம்பரத்திற்காகாகவும் தன் மீது பாஜக புகார் அளித்துள்ளது. கந்த சஷ்டி கவசம் குறித்த தன் பதிவு மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இரு பிரிவுக்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் நான் பதிவிடவில்லை.
அந்த பதிவும் நீக்கப்பட்டுவிட்டது. புதுச்சேரியில் சரண்டைந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கு என்பதால் சென்னை கொண்டுவரப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளேன்.” என சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.