தமிழ்நாடு

தமிழகத்திற்கு தண்ணீர்: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு

webteam

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசு சார்பில் கர்நாடக அரசு காவிரியில் சரிவர தண்ணீர் திறந்துவிடவில்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதேபோல் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்திற்கு ஜூலை 11ஆம் தேதிவரை காவிரியில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, இதன் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றிலிருந்து இவ்வழக்கின் இறுதி விசாரணை நடைபெறுகிறது.