சிறையில் இருந்து விடுதலையாகி, பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால், கர்நாடக அதிமுக செயலாளரை சந்திக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலாவை கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ், கர்நாடக அமமுக செயலாளர் சம்பத் ஆகியோர் சந்திக்க சென்றதாக இன்று காலை வீடியோ ஆதாரத்துடன் தகவல் வெளியானது. ஆனால், சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால், கர்நாடகா அதிமுக செயலாளரை சந்திக்கவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி கூறுகையில், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் யாரும் சசிகலாவை சந்திக்க முயற்சிக்கவில்லை. ஆனால் கர்நாடக செயலாளரான யுவராஜ் சந்தித்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் கட்சி நிர்வாகம் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்’’ என்று கூறியிருக்கிறார்.