ஊருக்குள் புகுந்த வெள்ளம் புதியதலைமுறை
தமிழ்நாடு

கன்னியாகுமரி | கடல் சீற்றத்தால் ஊருக்குள் புகுந்த நீர்.. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கடல் சீற்றம் காணப்பட்ட நிலையில், அலையில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் நிலை தடுமாறி விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

PT WEB

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கடல் சீற்றம் காணப்பட்ட நிலையில் அலையில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் நிலை தடுமாறி விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (அக்.,16) முதல் தேங்காபட்டணம், குளச்சல், குறும்பனை தொட்டில்பாடு பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சச அலைகள் எழுந்தன. இதில் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்திய பலரின் விசைப்படகுகள் சேதமடைந்தன.

இந்நிலையில், அழிக்கால் பிள்ளைத் தோப்பு வட்டார கடற்கரை பகுதிகளில் நேற்று ஏற்பட்ட கடல் சீற்றத்தால் ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பல வீடுகளுக்குள் கடல் நீருடன் மணலும் புகுந்து மக்களை அச்சுருத்தியதால், அவர்கள் உறவினர் வீடுகளிலும் திருமண மண்டபத்தில் அடைக்கலம் புகுந்தனர்.

வாகன ஓட்டி

அவ்வப்போது சீற்றமான அலை எழுந்து வீடுகளை சூழ்ந்து வருகிறது. பல பகுதிகளில் கடல் நீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் சுலபமாக நடமாட முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.

கடற்கரையில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் கடல் சீற்றத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற நிலையில் எதிர்பாராத விதமாக வந்த அலையில் சிக்கி நிலை தடுமாறி தனது வாகனத்தோடு கீழே விழுந்த காட்சி அதிர்ச்சியளித்தது.