தமிழ்நாடு

கன்னியாகுமரி: வேலை கிடைக்காத விரக்தியில் பொறியாளர் எடுத்த விபரீத முடிவு

kaleelrahman

கன்னியாகுமரியில் வேலை கிடைக்காத விரக்தியில் பொறியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் திக்கணம்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பகவத் (20) டிப்பிளமோ இன் பெட்ரோ கெமிக்கல் பொறியாளர் படிப்பு படித்துதுள்ள இவர், கடந்த ஒரு வருடமாக தான் படித்த துறை சார்ந்த வேலைதேடி அலைந்த நிலையில், அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த அவர், கடந்த மூன்று மாதமாக யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் வேலை இல்லாத காரணத்தால் பகவத் காதலித்து வந்த காதலியும் காதலை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பகவத் விஷ மாத்திரைகளை உண்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ந்து போன அவரது தாயார் ஷோபனா அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த தக்கலை காவல்நிலைய போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டள்ளனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்லமனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லைதற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறதுஅதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றனஅவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலைஆர்.புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)