நாதக பொதுக்கூட்ட மேடை அமைக்க திமுகவினர் எதிர்ப்பு pt desk
தமிழ்நாடு

கன்னியாகுமரி | எதிர்ப்பு காரணமாக மாற்றியமைக்கப்பட்ட நாதக பொதுக்கூட்ட மேடை.. நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நாம் தமிழர் கட்சியினர் பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சீமான் பேசும் பொதுக்கூட்ட மேடை மாற்றியமைக்கப்பட்டது.

PT WEB

செய்தியாளர்: சுமன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று மாலை குளச்சல் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இதற்காக குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு பகுதியில் நேற்றிரவு பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

நாதக பொதுக்கூட்ட மேடை அமைக்க திமுகவினர் எதிர்ப்பு

இதையடுத்து அங்கே உள்ள பள்ளி வாசல் அருகே மேடை அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், அந்த பகுதியில் மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சியினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், குளச்சல் போலீசார் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடைத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சீமான் பேசும் பொதுக்கூட்ட மேடை தற்போது அந்த இடத்தில் இருந்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.