தமிழ்நாடு

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கன்னியாகுமரி தொட்டிப்பாலம்

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கன்னியாகுமரி தொட்டிப்பாலம்

webteam

விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள இந்த தொட்டிப்பாலம், 384 மீட்டர் நீளமும் 101 அடி உயரமும் கொண்டது. 29 தூண்களுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் பாலத்திலிருந்து மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அழகை ரசிக்க முடியும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விளவங்கோடு தாலுகாவின் கடைமடை பகுதிகளுக்கும் நீரை கொண்டுசெல்ல ஏதுவாக, காமராஜரின் ஆட்சிக்காலத்தில் 1969ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம் ஆசியாவின் மிக உயர்ந்த தொட்டிப்பாலமாக கருதப்படுகிறது.