மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தவர், தளவாய்சுந்தரம். தற்போது கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏவான இவர் கடந்த இரு நாட்களுக்கு முன் கன்னியாகுமரியில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அவர், பாஜவினருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவரது கட்சிப் பதவிகளைப் பறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அந்த வகையில், தளவாய் சுந்தரம் வகித்துவந்த அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் இந்தப் பதவி பறிப்பு குறித்து தளவாய் சுந்தரம் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள விளக்கத்தில், “என்மீது நடவடிக்கை எடுத்தால் கவலையில்லை. தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் ஆர்எஸ்எஸ் பேரணியைத் தொடங்கி வைத்தேன். நீக்கப்பட்டுவிட்டால் ஓகே ரைட் என செல்ல வேண்டியதுதான்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழுத் தகவலை அறிய கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.