மாலை 6 மணிமுதல் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், பிபிஇ கிட் அணிந்துவந்து வாக்களித்தார் மக்களவை உறுப்பினரும் திமுக மகளிரணி தலைவருமான கனிமொழி.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாக தீவிர பரப்புரையில் ஈடுபட்ட கனிமொழிக்கு கடந்த 3ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலும், ஆம்புலன்ஸ் மூலம் வந்து சென்னை மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவுசெய்து ஜனநாயகக் கடமையாற்றினார் கனிமொழி.
அம்பத்தூர் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலும் பிபிஇ உடை அணிந்துவந்து வாக்களித்தார்.

#TamilNaduElections: DMK MP K Kanimozhi, who has tested positive for COVID-19, casts her vote in PPE kit at a polling station in Mylapore, Chennai.

Election Commission has designated one hour between 6 pm & 7 pm for voting by COVID positive patients. pic.twitter.com/z2G3ClKEie
— ANI (@ANI) April 6, 2021