தமிழ்நாடு

சிறையில் தந்தை- மகன் உயிரிழந்தது குறித்து முதல்வர் கருத்து தெரிவிக்காதது ஏன்? - கனிமொழி

சிறையில் தந்தை- மகன் உயிரிழந்தது குறித்து முதல்வர் கருத்து தெரிவிக்காதது ஏன்? - கனிமொழி

webteam

சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்? என தூத்துக்குடி எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ்(56). இவருடைய மகன் பென்னிக்ஸ்(31). கடந்த 19-ந்தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி கடை நடத்தியதாக இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த சாத்தான்குளம் போலீசார் கோவில்பட்டி சிறையில் விசாரணை கைதிகளாக அடைத்தனர்.

சிறையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. விசாரணைக் கைதிகளின் உயிரிழப்பு குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்? என தூத்துக்குடி எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உயிரிழந்த  இருவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பில் நிதியுதவியும், அரசு வேலையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.