தமிழ்நாடு

வரதராஜ பெருமாள் கோயிலில் தேர்த் திருவிழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

வரதராஜ பெருமாள் கோயிலில் தேர்த் திருவிழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

rajakannan

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலி‌ல் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மே மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா இன்று அதிகாலை தொடங்கி‌யது. அதிகாலை 4 மணியளவில் வரதராஜ பெருமாள் தேரில் எ‌ழுந்தருளினார். 

காலை 6 மணியளவில்‌ பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, காந்தி சாலை, காமராஜர் சாலை, நான்கு ராஜவீதிகள் வழியாக தேர் வலம் வந்து மதியத்தில் மீண்டும் நிலைக்கு வந்து சேரும். தேர்த் திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தேர் உற்சவத்தை யொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீசார் பக்தர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.