அரசு மருத்துவர்கள் pt desk
தமிழ்நாடு

காஞ்சிபுரம்: 7 மாத குழந்தை தொண்டையில் சிக்கிய தைல டப்பா.. பாதுகாப்பாக அகற்றிய அரசு மருத்துவர்கள்!

காஞ்சிபுரம் அருகே ஏழு மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை போராடி அகற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

PT WEB

செய்தியாளர்: இஸ்மாயில்

காஞ்சிபுரம் ஆளவந்தார்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அஜித் - டயானா தம்பதியர். இவர்களுக்கு குகனேஷ் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது.

குகனேஷ் நேற்று வீட்டில் இருந்த தைல டப்பாவை வாயில் வைத்து விளையாடியுள்ளார். அப்போது தெரியாமல் டப்பாவை விழுங்கியுள்ளார் அவர். இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதைக் கண்ட பெற்றோர், குழந்தையை தூக்கிக்கொண்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

Govt hospital

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததை அடுத்து சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்ப திட்டமிட்டு ஆம்புலன்ஸ்-க்கு தகவல் கொடுத்துள்ளனர். இருப்பினும் ஆம்புலன்ஸ் வருவதற்குள் குழந்தையின் தொண்டையில் சிக்கிய டப்பாவை எடுக்கலாம் என பாலாஜி, மணிமாலா ஆகியோர் முயற்சி செய்துள்ளனர்.

அப்போது தொண்டை மூச்சுக் குழாயின் இடையில் பலமாக சிக்கியிருந்த தைல டப்பாவை ‘குரல்வளைகாட்டி’ (laryngoscope) என்ற முறையில் போராடி வெளியே எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றினார். சில நொடியில் முடிவெடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.