கனமழை காரணமாக, திருவண்ணாமலை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன் விளைவாக இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள மொத்தம் 143 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன.
காஞ்சிபுரத்தில் உள்ள 91 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 22 ஏரிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 ஏரிகளும்அதன் முழு கொள்ளவை எட்டி நிரம்பியுள்ளன.
பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் நிலவரம்:
* காஞ்சிபுரம் மாவட்டம் - 91 ஏரிகள் 100 சதவிகிதமும், 99 ஏரிகள் 75 சதவிகிதமும், 65 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன
* செங்கல்பட்டு மாவட்டம் - 22 ஏரிகள் 100 சதவிகிதமும், 34 ஏரிகள் 75 சதவிகிதமும்,58 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன
* திருவண்ணாமலை மாவட்டம் - 30 ஏரிகள் 100 சதவிகிதமும், 10 ஏரிகள் 75 சதவிகிதமும்,12 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன
தொடர்புடைய செய்தி: முல்லை பெரியாறு அணை திறப்பு - தமிழக அரசு விளக்கம்
திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 143 ஏரிகள் 100 சதவிகிதமும், 152 ஏரிகள் 75 சதவிகிதமும், 142 ஏரிகள் 50 சதவிகிதமும் மீதமுள்ள 286 ஏரிகள் 25சதவிகிதத்துக்கும் குறைவாக நிரம்பியுள்ளன. இந்த மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 1022 ஆகும்